Sunday 28 July 2013

இது காதலின் கல்லறை





ஒரு தேனிர் விடுதி - இது
சாலையிலே சக்கரமாய் சுழழும்
எந்திர மனிதர்கள்
சற்று இளைப்பறிகொள்ளுமிடம்
வயிற்றுக்கும் வாழ்க்கைக்குமான
இடைவெளியை கொஞ்சம்
நிரப்பி கொள்ளுமிடம்.
இது காதலர்களின் தாய் வீடு
அரசியல்வாதிகளின் ஒத்திகை மேடை
பயணிகளின் நிழற்குடை
இளைஞர்களின் பொழுதுபோக்கு
இந்த விடுதியில் தான்
இந்த சம்பவமும்
அரங்கேறுகிறது.
      
ஒரு மேஜையின்
நான்கு இருக்கையில்
எதிரெதிர் இருக்கையில்
அதே பழைய விழிகள்
நான்கும் பார்த்து கொள்கின்றன
நொடிகளில் துவங்கிய பார்வை
சில நிமிடங்கள் வரை நீழ்கிறது
நான்கு விழிகளுக்குள்
நான்காயிரம் வினாக்கள்
விடைசொல்ல வேண்டிய
ஊதடுகள் மட்டும் ஊமையாகிவிட்டன
இங்கே பரிமாறிகொள்ள
வார்த்தைகள் இல்லை
அதனாலோ என்னவோ
பார்வை மட்டுமே
பரிமாறிகொள்ளப்படுகிறது.
இவர்கள் பேசிக்கொள்ள
ஆயிரம் வார்த்தைகள் இருந்தும்
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
பேசிக்கொள்ள நினைக்கிறார்கள்
இது விதைக்கப்பட்ட
காதல் இல்லை
அறுக்கப்பட்ட காதல்


பக்கத்தில் இருக்கும்
அவள் கணவன்
கோப்பையை நீட்ட
இடக்கரம் வாங்கி
வளக்கரம் சேர்த்து
இருகரம் பற்றி பிடிக்கிறாள்
இப்பொது இவனின் நினைவு
ஏழரை ஆண்டுகள்
பின்னோக்கி பயணிக்கிறது
ஐயங்காரு வீட்டு அழகு நிலவு
வாசலில் நின்று
இருகரம் பற்றி பிடித்து
உள்ளங்கையில் உள்ள
தேனிர் கோப்பையில்
உயிரையே உறிஞ்சி
குடித்த நினைவுகள்
அன்று அவளுக்கு
வயது பதினெட்டு
மயில் தொகை கூந்தல்
மான்விழி பார்வை
வண்ணத்து பூச்சியாய்
சிறகடித்து பறந்த
அந்த நாட்கள்
ஆனால் இப்போது
அவள் கூந்தல் அடர்த்தியில்
கொஞ்சம் குறைந்திருக்கிறது
ஆனால் இன்னும்
சாயம் போகாத அதே விழிகள்
அன்று அவள் காதலை
ஏற்று கொண்டிருந்தால்
திருமணம் ஆகி இன்றோடு
ஏழரை ஆண்டுகள் கடந்திருக்கும்
அவள் கண்கள் குளமாகி
உள்ளிருந்து ஒரு துளி மட்டும் உதிர்ந்து
கன்னத்தில் வழிகிறது
விழுந்த துளி கணவனின்
கண்ணில் படுமுன் துடைக்கிறாள்
புறப்பட தயாராகிறான்
அவள் கணவன்
மடியில் கிடந்த குழந்தையை
தோளில் போட்டுகொண்டு
புறப்படுகிறாள்.
சற்று தூரம் சென்று
மிண்டும் ஒருமுறை
விழியசைத்து விடைபெறுகிறாள்.
இப்போது இவன் பக்கத்தில்
அமர்ந்திருக்கும் மனைவி கேட்கிறாள்
அவ தான் பிரியா வா?

இங்கே
இது போல் காதல்கள்
இன்னும் எத்தனையோ?
சாதிகளால் சிதைக்கப்பட்டவை
மதங்களால் மறுக்கப்பட்டவை

இந்திய மண்ணில்
மட்டும் தான் இந்த நியதி
எழுதப்பட்டு இருக்கிறது
காதலை புதை இல்லையென்றால்
காதலர்களை புதைத்துவிடு
காதலின் சின்னம் தாஜ்மகால்
இங்கு மட்டும் இன்னும் கல்லறையாகவே

No comments:

Post a Comment