Thursday 20 August 2015

“ஜாதிகள் வீழ்ந்ததடி பாப்பா குல தாழ்ச்சி எழுச்சி சொல்ல ஆளே இல்லை” என்று பாட்டுறைபோம்.

இந்த காதல் ஜோடியின்
கல்யாணத்திற்கு குண்டம் அமைக்க
எரிதழல் பஞ்சமா நாட்டில்
குடிசைகளை எரித்தவன் எவனடா?
இந்த சிட்டு குருவிகள்
கூடுகட்டிய பாவத்திற்காய்
இருநூறு குடிசைகள் எரிக்கப்பட்டதா?
ஜாதி மாறி திருமணம் செய்தால்
அத்தனை கேவளமா?
இதற்கு கலப்பு திருமணம் என்று
பெயர் வைத்தவன் யாரடா?
இங்கே நாய்க்கும் நரிக்குமா
திருமணம் நிகழ்ந்தது?
ஆண் ஜாதிக்கும் பெண் ஜாதிக்கும்
நிகழ்ந்த திருமணம் கலப்பு திருமணமா?
அப்படியென்றால்
ஆணுக்கும் ஆணுக்கும்
பெண்ணுக்கும் பெண்ணுக்கும்
நிகழ்ந்தால் ஏற்று கொள்வீரா?

சதியை ஒழித்துவிட்டு போன
ஆங்கிலேயா ஏன்
சாதியை விட்டு விட்டாய்
இன்று எத்தனையோ
புறாக்கள் கூடு கட்ட முடியாமலேயே
கலைந்து போகிறதே
தந்தை பெரியாரை
மீண்டும் அழைப்போமா
பால்பட்ட தேசத்தை
பண்படுத்தட்டும்

ஜாதி மிருகங்கள்
கொண்டாடுகின்றன
இளவரசன் வீழ்ந்து விட்டான் என
ஜாதி வெறி பிடித்த ஜனநாயகமே
உனக்கு ஒரு எச்சரிக்கை
எங்கள் இளவரசன்
வீழ்ந்து விடவில்லை
விதைக்கப்பட்டு இருக்கிறான்
அதர்மபுரியை அழிக்க
எங்கோ ஒரு ஊரில்
ஏதாவதொரு பெயரில்
மீண்டும் பிறபானடா...

 வரைமுறை இன்றி வாழ்ந்து வரும்
உலக தேசங்களில்
ஒருவனுக்கு ஒருத்தி என்று
வாழ்ந்து வரும்
இது உன்னத தேசமடா
ஆபாச சிலை வடிக்கும்
ஆங்கில தேசங்களே
எம் தேசம்
கன்னகிக்கு சிலை வைத்த
கண்ணிய தேசமடா
கல்லரை அதிசயமாய் (பிரம்மீடு)
எகிப்திய தேசங்களே
காதல் அதிசயம் (தாஜ்மஹால்)
எங்கள் தேசமாடா


இங்கிலாந்தில் இருந்து வந்த
வெள்ளை பண்றிகளை
வேரோடு வீழ்த்தி விட்டோம்
உள்ளுக்குள் இருக்கும்
ஒநாய்களே உங்களையும்
ஒரு நாள் வேரருப்போம்.
அன்று எங்கள் பாட புத்தகத்தில்
“ஜாதிகள் வீழ்ந்ததடி பாப்பா
குல தாழ்ச்சி எழுச்சி சொல்ல ஆளே இல்லை”
என்று பாட்டுறைபோம்.
                   --   ஜெரோ

No comments:

Post a Comment