என் வாழ்கையையே
குப்பையாக்கிவிட்டு – ஏன் பெண்ணே
வீட்டு வாசலை
கூட்டிகொண்டு இருக்கிறாய்.
புள்ளி வைத்தது என்னவோ
வாசலில் தான் – ஆனால்
கோலமிட்டது
என் இதயத்தில்.
யாரிடம் கற்றாய் – இந்த
சிக்கல் கோலத்தை
அதில் சிக்கியது இதயம்
இன்று சிறைப்பட்டது
காதலும் என் வாழ்க்கையும்
உன் மருதாணி
செடிக்கு மட்டும் எப்படி
இந்த கருஞ்சிவப்பு நிறம்
உன் வாசலில்
உள்ளதாலா? இல்லை
உன் விரல்கள் தொட்டதாலா?
உன்னால்
சிவந்து அழகானது
என் வாழ்க்கை
மருதாணியின் நிறமாய் – விரைவாய்
மங்கி மறைந்து போயின
அந்த நாட்கள்.
உள்ளங்கையில் உள்ள
தேநீர் கோப்பையால்
என் உயிரையே
உறிஞ்சி குடிக்க
எப்படி முடிகிறது உன்னால்.
காலத்திற்கு
கல்லறை தந்த கடவுள் – ஏன்
காதலுக்கு மட்டும் அதை
தர மறுத்துவிட்டான்.
நிஜங்களை காலம்
புதைத்துவிடுகிறது – ஆனால்
நினைவுகளை
கண்ணீர் விட்டு
அழுதால் கூட கரையவில்லை
அந்த நினைவுகள்
நீங்காத நினைவுகள்
No comments:
Post a Comment