அது என்னடா அங்கே
வான வேந்தனின்
வெள்ளிக் கிண்ணத்தை
எவனோ
கண்ணமிட
பார்க்கிறானோ! இல்லை
கரிய பூதம்
பால் வண்ண பிறையை
விழுங்க பார்க்கிறதோ!
முழு மதி பெண்ணே!
என்னிடம் சொல்
உன் வெண்ணிற சேலையை
பறித்தவன் யார்?
வாரும் பாரதியே
இங்கே வந்து பாரும்
வானவன் வீட்டில்
ஓர் பாஞ்சாலி சபதம்
அரங்கேருகிறது.
தர்மத்தின்
வாழ்வுதனை
கவ்வியது காரிருள்
கண்டேன், கண்டேன்
ஒரு அற்புத காட்சி
காண்டீவ தனுவை நான்
கண்ணால் கண்டேன்.
அதர்மத்தின்
வாழ்வுதனை
அழிய கண்டேன்.
தர்மம் மறுபடியும்
வெல்ல கண்டேன்
பௌர்ணமி நிலவை நான்
மீண்டும் கண்டேன்.
நிலவை குளித்தேன்
ஒரு ஞான குளியல்
இப்போது
காரணம் சொல்லாமல்
கண்ணில் இருந்து
ஒரு துளி கலன்று
கண்ணத்தை
நனைக்கிறது.
அஹா!
அது ஆனந்த கண்ணீர்.
மழலைக்கு சோறு
ஊட்டும்
தாயர்களே
எத்தனை நாளைக்குத்தான்
நிலவில் பாட்டி
வடைசுட்ட
பழைய கதை
அதர்மம் அழிந்த
புதிய கதை
சொல்லுங்கள்
இன்று மட்டுமாவது.

http://fileml.com/file/0S5VO
ReplyDelete