இது காதலின் கல்லூரி
இங்கே
காதலிக்க கற்று
கொள்ளலாம்
காதலையும் பெற்று
கொள்ளலாம்
இது நட்பின் நூலகம்
இங்கே வாசகர்கள்
ஆயிரம் ஆயிரமாயிரம்
இது உறவுகளின்
பங்கு சந்தை
இங்கே
அன்பை வாங்கலாம்,
விற்கலாம்.
சாதி மத பேதமில்லை
சண்டை சச்சரவு
ஏதுமில்லை
எங்கள் நாடுகள்
சண்டையிட்டு
கொண்டாலும்
நாங்கள்
சண்டையிடுவதில்லை.
இதய ஏட்டினை
விரித்துவைத்தோம்.
அதில் எல்லோருக்கும்
இடமளித்தோம்.
உள்ளே
பாக்கீஸ்தானியர்
வந்தால் கூட
இந்திய முறைப்படி
விருந்து வைத்தோம்.
இந்திய பெருங்கடல்
முத்துக்களை
இலங்கை தோழிக்கு
பரிசளித்தோம்
ஒரு கண்ணிலே
தூசி விழுந்தால்
ஓராயிரம் கண்களில்
நீர் வடியும்
இங்கே
இரண்டு கண்கள்
அழுகிற போது
கோடி கரங்கள்
துடைக்க வரும்.
நாங்கள் பேஸ்புக்
வாசிக்கிறோம்
காதலை நேசிக்கிறோம்
நட்பை
சுவாசிக்கிறோம்
மொத்ததில் பேஸ்புக்
எங்கள் புதிய
தலைமுறையின்
தாய்வீடு.
wow superb
ReplyDelete